chennai Kakka thoppu Balaji incident 

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது 14 கொலை முயற்சி உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இத்தகைய சூழலில் தான் சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை கைது செய்யச் சென்ற போலீசாரை தாக்க முயன்றதால் தற்காப்புக்காகச் சுட்டதில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக இவரது உடல் ராயப்பேட்டைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

என்கவுண்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜி சென்னை பிராட்வே அருகே உள்ள பி.ஆர்.என் கார்டன் பகுதியில் பிறந்தவர் ஆவார். இவர் காக்கா தோப்பு பகுதியில் ரவுடிகளாக வலம் வந்த யுவராஜ் மற்றும் இன்பராஜ் உடன் தொடர்ந்து நட்பில் இருந்து வந்த நிலையில், தொழில் போட்டி காரணமாகக் கூட்டாளியான யுவராஜை காக்கா தோப்பு பாலாஜி கொன்றதாகக் கூறப்படுகிறது. அதோடு இவர் செம்மரக் கடத்தலிலும் ஈடுபட்டு வந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் மீது கொலை வழக்குகள், அடிதடி, மிரட்டல், ஆட்கடத்தல் என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகச் சென்னை காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.