கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று (29/03/2020) ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை ஜாம்பஜார் மார்க்கெட்டில் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்தது. கரோனாவின் ஆபத்தை மறந்து அப்பகுதி மக்கள் மார்க்கெட்டில் குவிந்த்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இதனால் திருவல்லிக்கேணி துணை ஆணையர் தர்மராஜன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். அப்போது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வரிசையில் நின்று வாங்கிச் செல்லுமாறு துணை ஆணையர் அறிவுறித்தினார். இதையடுத்து பொதுமக்கள் காய்கறி மற்றும் இறைச்சி கடையில் இடைவெளி விட்டு வரிசையில் நின்று தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி சென்றனர்.