Advertisment

மண்சரிவிலிருந்து போராடி மீட்கப்பட்ட நபர் உயிரிழப்பு!

Advertisment

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் தனியார் கண் மருத்துவமனை கட்டப்பட்டு வரும் நிலையில், அந்த கட்டிடத்திற்குத்தேவையான மழைநீரை சேமிக்க மழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்க குழி தோண்டும்பொழுது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து குழிவெட்டும் தொழிலாளர்கள் மூன்று பேர் உள்ளே விழுந்தனர். இதுதொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படை வீரர்கள் குழிக்குள் விழுந்த ஆகாஷ், வீரப்பன்ஆகியஇருவரை போராடி மீட்டனர்.

மதியம் 2 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்த நிலையில், 2 மணிநேரத்திற்கு மேலாக முயன்றும்மூன்றாவது நபரான சின்னதுரை என்பவரைமீட்க முடியாமல் போராடிவந்தனர்.15 அடி ஆழம் கொண்ட குழிக்குள் மீட்கப்படாமல் மண்ணுக்குள் புதைந்திருந்த மூன்றாவது நபரானசின்னத்துரை பல்வேறு முயற்சிகளுக்கு பின் சுமார் 5 மணியளவில் மீட்கப்பட்டார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், 108 ஆம்புலன்சில் சின்னத்துரைசிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால் இறுதியில் சின்னத்துரை உயிரிழந்துள்ளார் என தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.

incident Rescue vannarapettai
இதையும் படியுங்கள்
Subscribe