சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் பெண் வழக்கறிஞர் கைது. ரவுடி அழகுராஜாவின் தாயான பெண் வழக்கறிஞர் மலர்க்கொடியுடன் கூட்டாளிகளான மணிகண்டன், விஜயகுமார் உள்ளிட்டோரை கைது செய்தது காவல்துறை. கைதான மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தன்னை கொல்ல முயன்ற கும்பலை விரட்டுவதற்காக நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளார் ரவுடி அழகுராஜா. அரிவாள் வெட்டு, நாட்டு வெடிகுண்டு வீச்சில் காயமடைந்த ரவுடி அழகுராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸ் கொலையில், அழகுராஜாவுக்கு தொடர்பாக இருப்பதாக கருதி கொலை முயற்சி நடந்தது.