சென்னை தாம்பரம் அருகே முகேஷ் என்ற தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் முகேஷ் காயமடைந்த நிலையில், அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
முகேஷை துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓடிய விஜய் என்ற இளைஞரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இளைஞர் விஜய் சரணடைந்தார். துப்பாக்கிச்சூடு எப்படி நடந்தது, துப்பாக்கி கிடைத்தது எப்படி என்ற விவரங்கள் வெளியாகாத நிலையில் விஜய் சரண்.