Advertisment

chennai incident -Special force set up to investigate

Advertisment

ரயிலிலிருந்து இளம் பெண்ணைத் தள்ளி கொலை செய்த இளைஞரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சத்யா (வயது 20) என்ற இளம்பெண், கல்லூரிக்கு செல்வதற்காக, இன்று (13/10/2022) மதியம் 12.00 மணிக்கு பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்த சதீஷ் என்ற இளைஞர் பின் தொடர்ந்துள்ளார். அத்துடன், தன்னை காதலிக்குமாறு பெண்ணை வற்புறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், இளம்பெண்ணைத் தள்ளிவிட, தண்டவாளத்தில் விழுந்த பெண் மீது மெரினா செல்லும் மின்சார ரயில் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே இளம்பெண் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கு காரணமான இளைஞரை போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.