Advertisment

மூதாட்டி கொலை; வீட்டில் குடியிருந்த இளம்பெண் உள்பட 3 பேர் கைது

chennai incident; 3 people including the young woman who lived in the house were arrested

Advertisment

சென்னையில் மூதாட்டி ஒருவர் அவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தரமணியில்சாந்தகுமாரிஎன்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். அவரது வீட்டில் ஸ்ரீஜா என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மூதாட்டி சாந்தகுமாரி அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். அவரின் முகம் மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயங்கள் இருந்துள்ளது. இதுகுறித்து தரமணி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மோப்ப நாய் உதவியுடன் கைரேகை நிபுணர்கள் சோதனை நடத்தினர். அப்பொழுது மூதாட்டி சாந்தகுமாரியின்வீட்டில் வாடகைக்கு இருந்தஸ்ரீஜா குடும்பத்தினர் எந்த சலனமும் இல்லாமல் வீட்டை காலி செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மூதாட்டிக்கும் ஸ்ரீஜா குடும்பத்திற்கும் ஏற்கனவே தகராறு இருந்தது தெரிய வந்தது.

Advertisment

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில்மூதாட்டியின் மருமகன் ஸ்ரீஜாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் புகாரளிக்காமல் இருக்க பணம் கேட்டு அவ்வப்பொழுது பிளாக்மெயில் செய்து வந்துள்ளார்ஸ்ரீஜா. ஆனால் ஒரு கட்டத்தில் வீட்டை காலி செய்யுமாறு சாந்தகுமாரி தெரிவித்துள்ளார். வீட்டை வேறொருவருக்கு லீசுக்கு விடுவதற்காக 3.5 லட்சம் ரூபாய் தொகையை சாந்தகுமாரி பெற்றிருந்த நிலையில் இதனையறிந்த ஸ்ரீஜா மற்றும்அவரது தம்பி விஜய், அம்மா மேரி ஆகியோர் ஒன்று சேர்ந்து மூதாட்டி சாந்தகுமாரியை கொலை செய்து பணத்தை திருடிக் கொண்டு வீட்டை காலி செய்ய முயன்றது தெரிய வந்தது.

incident police Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe