Advertisment

சென்னை ஐஐடியில் தொடரும் மரணங்கள்; மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை!

chennai iit student lost their life

சென்னை ஐஐடியில் மீண்டும் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Advertisment

சென்னை ஐஐடியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த புஷ்பக் ஸ்ரீ சாய் என்ற மாணவர் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவர் புஷ்பக் ஸ்ரீ சாய் இன்று விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பான தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டூர்புரம் போலீசார் மாணவர் புஷ்பக் ஸ்ரீ சாய் உடலைக் கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisment

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் சென்னை ஐஐடியில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீரிங் எம்.எஸ். இரண்டாம்ஆண்டு படித்து வந்த மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஸ்டீவன் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது அடுத்த மாதமே மீண்டும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe