Advertisment

ஐஐடி மாணவி தற்கொலை- பேராசிரியர்களிடம் விசாரணை!

சென்னை ஐஐடியில் பயின்று வரும் கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் (நவ 8) அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

chennai iit student incident police investigation

கேரளா மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கிளிகொல்லூர் கிராமத்தை சேர்ந்த பாத்திமா லதீப் (18). இவர் ஐஐடி வளாகத்தில் உள்ள சரவியூ விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு எம்.ஏ (கியூமனேட்டீஸ்) பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் 8 ஆம் தேதி அன்று இரவு 12.00 மணிக்கு தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மாணவியின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தன. அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் மாணவியின் செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர் தடவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Investigation police incident chennai IIT STUDENT
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe