சென்னை ஐஐடியில் பயின்ற கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா, கடந்த நவம்பர்மாதம் 9- ஆம் தேதி ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் ஃபாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chennai ii4.jpg)
ஃபாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஃபாத்திமாவின் தந்தை ஃலத்தீப் மனு அளித்திருந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us