பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கரோனா பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் “மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் எஸ்.பி.பி. கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். தந்தை எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது” இவ்வாறு எஸ்.பி.பி.யின் மகன் சரண் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் விரையில் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.