Advertisment

சென்னையில் நகை, பணத்திற்காக பெண்ணைக் கொலை செய்த வழக்கு! -மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை!

நகை, பணத்திற்காக பெண்ணைக் கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Advertisment

Chennai highcourt Three sentenced to life imprisonment

சென்னை லிங்கப்பன் தெருவில் கதிஜா என்ற பெண் தனியாக வசித்து வந்தார். அவரது வீட்டில் ஓட்டுநராக சயது இப்ராஹிம் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி கதிஜா வீட்டில் தனியாக இருப்பதைத் தெரிந்து கொண்ட சயது இப்ராஹிம் அவரது நண்பர் வேலு, பரணிதரன் ஆகிய மூன்று பேரும், கதிஜாவைக் கொலை செய்து வீட்டில் இருந்த 8 சவரன் நகை, 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் செல்போன் ஆகியற்றை திருடிச் சென்றனர்.

Advertisment

தன்னுடைய தாய் கதிஜாவின் மரணத்தில் சந்தேகமடைந்த அவரது மகன் முகமது அப்பாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையம் வழக்கு பதிவு செய்தது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சயது இப்ராஹிம் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த சென்னை 7-வது கூடுதல் அமர்வு நீதிபதி டி.வி.அனில்குமார் குற்றவாளிகள் மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறை சார்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளதால் அந்த மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார்.

Chennai highcourt sentenced Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe