சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்ட வி.கே.தஹில் ரமானியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிந்துரை செய்தது.

Advertisment

chennai highcourt new judge

இதனையடுத்து தஹில் ரமாணி பதவி விலகிய நிலையில், ஏ.பி.சஹி புதிய நீதிபதியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.