Advertisment

முகலிவாக்கம் சிறுவன் உயிரிழப்பை தானாக முன்வந்து விசாரிக்க முடியாது- உயர்நீதிமன்றம்

சென்னை முகலிவாக்கத்தில் தெருவிளக்கு மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தநிலையில், இதற்காக மாநகராட்சி சார்பில் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.

Advertisment

chennai highcourt about mukalivakkam case

அப்பணிகள் நிறைவடையாமல் உள்ள நிலையில் பள்ளங்களை தற்காலிகமாக மாநகராட்சி சார்பில் மணல் நிரப்பி மூடி உள்ளனர். இந்நிலையில் மழை காரணமாக மணல் சரிந்ததில் சாலைகளில் புதைக்கப்பட்டிருந்த மின்சார கம்பி வெளியே வைத்தது. இந்த நிலையில் முகலிவாக்கம் தனம் நகரை சேர்ந்த 14 வயது சிறுவன் தீனா அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த பொழுது தெரியாமல், அந்த மின்சாரம் வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisment

இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஜார்ஜ்வில்லியம்ஸ் என்ற வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிபதிகள் சத்தியநாராயணன், ஷேசாயி ஆகியோர் அந்த கோரிக்கையை நிராகரித்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டால் கண்டிப்பாக விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe