Skip to main content

நடிகர் சங்க தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 

Published on 23/02/2022 | Edited on 23/02/2022

 

Chennai High Court verdict in the actor's union election case

 

நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது என்ற நீதிபதியின் உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சங்கத் தேர்தல் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

கடந்த 2019ஆம் ஆண்டு ஜுன் 23ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனிநீதிபதி கல்யாணசுந்தரம் தேர்தல் செல்லாது எனத் தீர்ப்பளித்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து விஷால், கார்த்திக், நாசர் தரப்பு மேல்முறையீடு செய்தது.

 

இந்நிலையில், இவ்வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2019ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தல் செல்லும் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அந்தத் தீர்ப்பில் மீண்டும் தேர்தல் நடத்த தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், லாக்கரில் இருக்கும் எண்ணப்படாத வாக்குகளை எண்ணலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்