சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து உயர்நீதிமன்ற பாதுகாப்பு குழு ஆலோசனை. இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருபாகரன், சசிதரன், மணிக்குமார், ரவிச்சந்திரபாபு, பி.என்.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்பு. மேலும் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், சிஐஎஸ்எப் கமாண்ட்ன்ட் ஸ்ரீராம் ஆகியோர் ஆலோசனை செய்து வருகின்றனர்.

chennai high court safety issue high commission security meeting start now

Advertisment

Advertisment

சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு டெல்லி காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹதர்ஷன் சிங் நாக்பால் கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். அந்த கடிதத்தில் தனது மகனுடன் சேர்ந்து செப்டம்பர் 30- ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.