சென்னை உயர் நீதிமன்றம் காணொலிக் காட்சி மூலம் முழுமையாக இயங்கும்! –நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு!

Chennai High Court is running full video footage! - Judges' meeting decided!

ஊரடங்கு காலத்தில்,சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு நீதிபதிகள், அவசர வழக்குகளை மட்டும் விசாரித்து வந்த நிலையில், ஜூலை 6 முதல்அனைத்து நீதிபதிகளும், காணொலிக் காட்சி மூலம்புதிய மற்றும் நிலுவை வழக்குகளை விசாரிக்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க,கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டு, அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டன.

இரு நீதிபதிகள் அடங்கிய இரண்டு அமர்வுகள், பொது நல வழக்குகள், ஆட்கொணர்வு வழக்குகளை விசாரித்தன. அதேபோல, நான்கு தனி நீதிபதிகள், ஜாமீன், முன் ஜாமீன் மற்றும் பொது வழக்குகளை விசாரித்து வந்தனர். இடையில், நீதிமன்ற விசாரணையை துவங்கியபோது, நீதிபதிகளுக்கும், ஊழியர்களுக்கும் தொற்று பரவியதை அடுத்து, மீண்டும் காணொலிக் காட்சி மூலம் வழக்குகள் விசாரணை துவங்கியது.

நீதிபதிகள், தங்கள் வீடுகளில் இருந்தும், வழக்கறிஞர்கள் தங்கள் வீடுகளில் இருந்தும், சில நேரங்களில் சில வழக்கறிஞர்கள்தங்கள் வாகனங்களில் இருந்தும்விசாரணையில் ஆஜராகி வந்தனர். இந்தக் காணொலிக் காட்சி விசாரணையின்போது, இடையூறுகள், தொழில்நுட்ப சிக்கல்களின் காரணமாக, திறமையாக தங்கள் வாதங்களை முன் வைக்க முடியவில்லை என வழக்கறிஞர்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், நீதிமன்றங்களைத் திறந்து, நேரடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்து, அனைத்து நீதிபதிகள் கூட்டத்தைக் கூட்டி, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், ஜூலை 6 முதல் அனைத்து நீதிபதிகளும், புதிய மற்றும் நிலுவை வழக்குகளை விசாரிப்பது எனவும், காணொலிக் காட்சி மூலம் மட்டும் வழக்குகளை விசாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இரு நீதிபதிகள் அடங்கிய ஆறு அமர்வுகளும், 27 தனி நீதிபதிகளும், ஜூலை 6 முதல்வழக்கமான நடைமுறைப்படி வழக்குகளை விசாரிக்க உள்ளனர். இதேபோல,மதுரைகிளையில், இரு நீதிபதிகள் அமர்வு இரண்டும், ஒன்பது தனி நீதிபதிகளும் வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.

கரோனா ஊரடங்கு காலத்தில்அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை 6 முதல் புதிய வழக்குகள், பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது எனநீதிபதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

corona virus highcourt
இதையும் படியுங்கள்
Subscribe