
தமிழகத்தில் கரோனா தடுப்புநடவடிக்கை காரணமாக முழுஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில்ஏழு கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்கங்கள் போன்றவை காலவரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றங்களும் மூடப்பட்டது.இதன் காரணமாக பொதுமுடக்கம்அறிவிக்கப்பட்ட மார்ச் 25 -ஆம் தேதி முதல் நீதிமன்றங்களில் விசாரணைகள் காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7 -ஆம் தேதி முதல் நேரடி விசாரணையைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகள் 7 பேர் கொண்ட நிர்வாகம் தொடர்பான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 160 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நேரடி விசாரணை தொடங்க இருக்கிறது. நேரடி வழக்குகளை விசாரிக்கும் முறை சோதனை அடிப்படையில் இரண்டு வாரம் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us