/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CH234444.jpg)
சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'வரும் திங்கட்கிழமை முதல் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே உயர்நீதிமன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற வழக்கறிஞர்கள் காணொளி காட்சி மூலமாக மட்டுமே ஆஜராக வேண்டும். வழக்கறிஞர்களின் அறைகள் மூடப்படும் என்பதால், நாளை (07/03/2021) வரை ஆவணங்களை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், "வழக்கறிஞர்கள் அறைகள் மூடப்படுவதால் நீதிமன்றப்பணிகள், வாழ்வாதாரம் பாதிப்படையும். மார்ச் 8- ஆம் தேதி முதல் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும்" என்று கூறினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)