Advertisment

அரசாணைகள் இணையத்தில் பதிவேற்றப்படுகிறதா? - பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

tamilnadu government gazette notification chennai high court order

அரசாணைகள் இணையத்தில் பதிவேற்றப்படுகிறதாஎன்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், "வருவாய்த்துறை மூலம் 14 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு 5 மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும், 'StopCorona' இணையதளத்தில் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இந்த வழக்கு இன்று (20/05/2021) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள் ஆகியவை தமிழக அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு இன்று (20/05/2021) மதியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

tn govt chennai high court
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe