Published on 20/05/2021 | Edited on 20/05/2021

அரசாணைகள் இணையத்தில் பதிவேற்றப்படுகிறதா என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், "வருவாய்த்துறை மூலம் 14 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு 5 மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும், 'StopCorona' இணையதளத்தில் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று (20/05/2021) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள் ஆகியவை தமிழக அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு இன்று (20/05/2021) மதியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.