FORMER MINISTER CHENNAI HIGH COURT ORDER

Advertisment

பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9ஆம் தேதிவரை கைதுசெய்யக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாக துணை நடிகை அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். அதனைத் தொடர்ந்து அவரை விசாரணை செய்வதற்காகவும், ஆதாரங்களைத் திரட்டுவதற்காகவும் தனிப்படை காவல்துறையினர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விரைந்தனர். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் தலைமறைவாகியுள்ளார். அவரை தீவிரமாகத் தேடிவரும் நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று (03/06/2021) விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரித்த நீதிபதிகள், "முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9ஆம் தேதிவரை கைது செய்யக் கூடாது" என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisment

அதேபோல், புகாரளித்த துணை நடிகையின் ஆட்சேபனை மனுவைப் பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.