மதமோதல்களைத்தூண்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்எனச்சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி புகழேந்தி வழக்கு ஒன்றில் கருத்து தெரிவிக்கையில், “மதமோதல்களைத்தூண்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத மோதல்கள்தொடர்பாகப்புகார் கொடுத்தும் வழக்குப்பதிவுசெய்யக்காலதாமதம் ஏன் ஏற்படுகிறது. மத மோதல்களை உருவாக்கும் வகையில் பதிவிடுவோரைவிசாரிக்கத்தனிப்பிரிவுஅமைக்கப்பட்டுள்ளதா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.