Skip to main content

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தூக்கு தண்டனை ரத்து!!!

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம், தேனியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது.
 

chenai high court madurai branch


இந்த வழக்கை விசாரித்த தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் 2018 அக்டோபரில் சுந்தர்ராஜ், ரவி, குமரேசன் ஆகிய மூவருக்கும் தூக்குதண்டனை விதித்தது. தற்போது இந்த தூக்குதண்டனையை ரத்துசெய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களை உடனே விடுதலை செய்யவும் உத்தரவிட்டுள்ளது. 
 

இந்த வழக்கை பொறுத்தவரையில் அரசு தரப்பு விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. பல முக்கிய சாட்சிகளின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது, முக்கிய சாட்சிகள் பலர் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரசிகர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் - அரசு ஆணையிட பொதுநல மனு தாக்கல்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

Public Interest Petition filed to order Govt regards fans show

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு திருவிழா போல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறப்பு காட்சிகளில் ரசிகர்கள் வெடி வெடித்து, பேனர் மற்றும் போஸ்டர்கள் அடித்து, கேக் வெட்டி, மேளதாளத்துடன் படத்தை கொண்டாட்டத்துடன் வரவேற்கின்றனர். அந்த வகையில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படத்திற்கு, முதல் நாள், நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. அப்போது லாரியின் மீது கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

 

அதன் பிறகு வெளியான எந்த படத்திற்கும் அதிகாலை மற்றும் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் விஜய் நடிப்பில் வருகிற 19ஆம் தேதி வெளியாகவுள்ள லியோ படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்கி நள்ளிரவு 1.30 மணிக்குள் கடைசி காட்சி முடிக்கவேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் படம் பார்க்க வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் பிரபல நடிகர்களின் ரசிகர் காட்சிகளுக்கு அரசு விதிகள் வகுக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், புதிய பட ட்ரைலர் வெளியிடும் திரையரங்கில் ரசிகர்கள் பொதுமக்கள் பாதுகாப்புக்கு விதிகள் வகுக்க வேண்டும். ரசிகர் காட்சிகளில் வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களால் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. மேலும் ரசிகர்களை கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு தர உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது

 

 

 

Next Story

'பொதுத் தேவைக்கு போராட குடிமகனுக்கு உரிமை உண்டு'- உயர்நீதிமன்றம் கருத்து!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021

 

 

chennai high court madurai bench judge

 

சாலையைச் சீரமைப்பதற்காகப் போராடியவர்கள் மீதான இறுதி அறிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே சாலையைச் சீரமைக்கோரிப் போராடியவர்கள் மீதான வழக்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று (10/07/2021) நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, "தங்களின் பொதுத் தேவைக்கு போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. தங்கள் கிராமத்திற்கான பொதுச் சாலையைச் சீரமைக்க, செப்பனிடக் கோரியே போராட்டம் நடைபெற்றுள்ளது. கட்டுப்படுத்தக் கூடிய வகையில் நடந்த போராட்டம் என்பதால் இதை சட்டவிரோதம் எனக் கூற முடியாது. அத்தியாவசியத் தேவைகளுக்காக அமைதியாக நடக்கும் போராட்டத்தைச் சட்டவிரோதமாகக் கருத முடியாது" எனக் கூறி சாலையைச் சீரமைப்பதற்காகப் போராடியவர்கள் மீதான இறுதி அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.