chennai high court madurai bench judges order

Advertisment

ஒரு மாநில அரசு எந்த மொழியில் மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்புகிறதோ அதே மொழியிலே பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை தொகுதியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுத்த ஒரு வழக்கில், "குரூப் பி, குரூப் சி பிரிவில் 780 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்காக தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்வு மையம் அமைக்கவில்லை. இப்பகுதியில் குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையமாவது அமைக்க வேண்டி தான் அனுப்பிய கடிதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியில் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. இந்தியில் பதில் கடிதம் அனுப்புவது அரசியலைப்பு சட்ட உரிமைகளுக்கும், அலுவலக மொழிச் சட்டத்திற்கும் முரணானதாகும்" என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக உத்தரவைப் பிறப்பித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், "மாநில அரசு எந்த மொழியில் மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்புகிறதோ, அதே மொழியிலேயே மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். இந்திய அலுவலக மொழி சட்டமும் இதனை உறுதி செய்கிறது. மத்திய அரசு மற்றும் அதன் அலுவலகர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாகப் பின்பற்ற உத்தரவிடப்படுகிறது" எனக் குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.