style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="1282094959" data-ad-format="auto" data-full-width-responsive="true">
விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கான அபராதத்தை ரூ.10,000லிருந்து ஒரு லட்சமாகஉயர்த்தவேண்டும். வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுபவர்களின் உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும் என ரமேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளைஇவ்வாறு கூறியுள்ளது.
செல்போன் பேசிக்கொண்டேவாகனங்களை ஓட்டுபவர்களின் செல்போனை பறிமுதல் செய்ய ஏன் உத்தரவிடக்கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிமீறல்பற்றி புகார் அளிப்பதற்கான எண் அணைத்துவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஜிபியிடம் தகவல் பெற்று தெரிவிக்க அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை பிப்ரவரி 25ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7394694274" data-ad-format="link" data-full-width-responsive="true">