சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட புதிய நீதிபதிகள் 10 பேர் பதவியேற்றனர்.

Advertisment

சென்னை உயர்நீதிமன்ற ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சதிக்குமார், ஆர்.என்.மஞ்சுளா, கே.முரளி சங்கர், டி.வி.தமிழ்ச்செல்வி ஆகிய 10 நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Advertisment

இந்த பதவியேற்பு நிகழ்ச்சி யூடியூப் மூலம் நேரலை செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்னும் 12 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.