Advertisment

சென்னை உயர்நீதிமன்றத்தில் 8 நிரந்தர நீதிபதிகள் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் எட்டு பேர் நிரந்தர நீதிபதிகளாக இன்று (17/03/2020) பதவியேற்றுக் கொண்டனர்.

Advertisment

சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகிய 9 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையை ஏற்று 9 நீதிபதிகளையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

chennai high court judges ceremony chief judge

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இவர்களில், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணிமாற்றம் செய்யப்பட்டதால், மீதமுள்ள எட்டு நீதிபதிகளும், இன்று (17/03/2020) நிரந்தர நீதிபதிகளாகப் பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில், அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதி பணியிடங்களில், தற்போது 21 இடங்கள் காலியாக உள்ளன.

chennai high court Chief Justice judges oath ceremoney
இதையும் படியுங்கள்
Subscribe