அனுமதியின்றி பேனர் வைத்து உயிரிழப்பு நேர்ந்தால் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுங்கள் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை.
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்மணி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அனுமதியின்றி பேனர் வைத்து உயிரிழப்பு நேர்ந்தால் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும் அக்டோபர் 14- ஆம் தேதிக்கு பிறகு தமிழ்மணிக்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டனர்.