Advertisment

தனிநபர்கள் எத்தனை பேருக்கு போலீஸ் பாதுகாப்பு? -பதிலளிக்க டி.ஜி.பி.-க்கு உத்தரவு!

தமிழகத்தில் எத்தனை தனிநபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது? எதற்காக வழங்கப்படுகிறது? என்பதற்கு பதிலளிக்க தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

Chennai High Court has ordered the Tamil Nadu DGP to reply

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் மீன் வலை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 21-ம் தேதி அவரது மகன் சதீஷ்குமார், தொழிற்சாலை உள்ளிட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித் தரும்படி உறவினர்களுடன் வந்து குப்புசாமியைத் தாக்கியுள்ளார். இதுகுறித்து குப்புசாமி சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் அவரை அழைத்து சொத்துக்களை மகனின் பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் வழக்கறிஞரின் ஆலோசனை பெற வந்த குப்புசாமி ஊர் திரும்பவில்லை எனக் கூறி, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என அவரது சகோதரர் பக்தவச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

Advertisment

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது நேரில் ஆஜரான குப்புசாமி, தனது புகார் மீது வழக்கு பதிவு செய்யத் தவறிய காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தொடர்பாக டிஜிபி மற்றும் மாநகர காவல் ஆணையரை எதிர்மனுதாரராகச் சேர்த்த நீதிபதிகள், தமிழகத்தில் எத்தனை தனி நபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கபடுகிறது? எதற்காக பாதுகாப்பு வழங்கப்படுகிறது? போலீஸ் பாதுகாப்பு தேவையா? இல்லையா என்பது எத்தனை நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது? கட்டப் பஞ்சாயத்து பேர்வழிகளுக்கு எதற்காக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது? சமூதாயத்தில் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ள தனிநபருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறதா? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு மார்ச் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் நேரில் ஆஜராகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

chennai high court DSP police
இதையும் படியுங்கள்
Subscribe