Published on 11/09/2020 | Edited on 11/09/2020

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.எம். நடராசன் முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் ட்விட்டர் பதிவில், 'சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் நடராசனின் மறைவு செய்தி அறிந்து மிகவும் துயரமுற்றேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாராட்டைப் பெற்று வாழும்போதே வரலாறாக வாழ்ந்த கே.எம்.நடராசன் மறைவு பேரிழப்பாகும். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முதல் தலைவர், செங்கல்வராயர் அறக்கட்டளையின் தலைவர் போன்ற பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர். நடராசனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.