High Court dismissed petition against Edappadi Palaniswami Pollachi case

கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இவ்வழக்கின் குற்றவாளிகளான திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன், சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இதனிடையே இந்த விவகாரத்தில் புகார் அளித்த பெண்களின் பெயர்களை வெளியிட்ட எஸ்.பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயருடன் அரசாணை வெளியிட்டது தொடர்பாக விசாரிக்கக் கோரி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அப்போதைய தலைமைச் செயலாளர் ஆகிய இருவருக்கும் எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியுள்ள உத்தரவை தெரிந்து கொள்ளாமல் இந்த வழக்கை தொடர்ந்திருப்பதாகக் கூறி ரூ. 50 ஆயிரத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முதலில் இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்டஎஸ்.பி பாண்டியராஜனுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதற்கு அரசு தரப்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.