style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை இன்னமும் நடைமுறைப்படுத்தாது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்டை கட்டாயமாக கோரி சென்னை கொரட்டூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி மணிக்குமார் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு,

பின் இருக்கையில் பயணிப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதியை அமல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில் பின் இருக்கையில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் இல்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்தனர். ஹெல்மெட் கட்டாயம் என்பதோடு இருசக்கர வாகனத்தில் பின்னால் இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்பது தெரிய வருவதாக கருத்து தெரிவித்தனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதற்கு அரசு தரப்பில் இருசக்கர வாகனத்தில் பின்னால் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிவதை படிப்படியாக தான் நடைமுறைப்படுத்த முடியும், இது குறித்து பள்ளிக்கல்லூரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதனை கேட்ட கொண்ட நீதிபதிகள், பின்னால் இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தி அது தொடர்பான விரிவான அறிக்கையை வரும் நவம்பர் மாதம் 9 ம் தேதி தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">