Advertisment

இயக்குனர் முருகதாஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!!

ரஜினிகாந்த்நடித்ததர்பார் திரைப்படம் வெளியாகி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில்இதனால் பாதிப்படைந்தவிநியோகிஸ்தர்கள் கடந்த மூன்றாம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள இயக்குனர் முருகதாஸின் அலுவலகம் மற்றும்சாலிகிராமத்தில் உள்ள அவரதுவீட்டின்முன்புறம்15 க்கும் மேற்பட்ட விநியோகிஸ்தர்கள் ஒன்று சேர்ந்துஇயக்குனர் முருகதாஸிற்கு எதிராக முழக்கங்கள் இட்டனர்.

Advertisment

 Chennai High Court denounces director Murugadoss

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதனையடுத்து தனக்கும், வீடு மற்றும் அலுவலகத்திற்கும் தனிப்பட்ட முறையில் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் எனசென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் முருகதாஸ்சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நஷ்டத்திற்கு படத்தின்தயாரிப்பு நிறுவனமானலைக்காவை நாடாமல் தன்னை மிரட்டி வருவதால்தனக்குபோலீஸ் பாதுகாப்பு வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கின்விசாரணையில் இந்த மனு மீது காவல்துறைபதிலளிக்கநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்குவந்தது. முருகதாஸ் சார்பில் ஆஜரானவழக்கறிஞர்,திரைப்படவிநியோகிஸ்தர்கள் சார்பில்இயக்குனர் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், அந்த கடிதத்தில் இனி பிரச்சனைகள் ஏற்படாது எனவும்கூறப்பட்டுள்ளது எனவே முருகதாஸ்சார்பில் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு தரவேண்டும் என்ற மனுவைவாபஸ் பெற போவதாகவும் தெரிவித்தார்.

 Chennai High Court denounces director Murugadoss

காவல்துறை சார்பில்ஆஜரான வழக்கறிஞர், இந்த புகார் தொடர்பாக 2 வழக்குகளின் கீழ் 15 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். அப்போது குறுக்கிட்டநீதிபதி, நீங்கள் வேண்டும் என்றால் பாதுகாப்பு கேட்பீர்கள், நீங்கள் வேண்டாம் என நினைத்தால்இந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்க கூடாதாஎனகேள்விஎழுப்பினார். மேலும் நீங்கள் விருப்பப்படுவதுபோல் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா எனகேள்வி எழுப்பி இயக்குனர் முருகதாஸுக்கு கண்டனத்தை தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.

Chennai highcourt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe