ஏப்ரல் 29- இல் சென்னை உயர்நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் கூட்டத்தைக் கூட்டும்படி தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களுக்கு மே 1- ஆம் தேதி முதல் மே 31- ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மார்ச் இறுதி வாரத்திலிருந்து அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டு, அவசர வழக்குகள் காணொலி மூலம் விசாரிக்கப்படுகின்றன.

Advertisment

chennai high court chief judge order video conferencing meeting

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகக் குழு நீதிபதிகள் கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில், மே மாத விடுமுறையை ஒத்திவைப்பதாக முடிவெடுக்கப்பட்டு, அனைத்து நீதிமன்றங்களும் முழுவீச்சில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், வழக்கறிஞர் சங்கங்கள் கொடுத்த கோரிக்கையின் அடிப்படையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் எழுதிய கடிதத்தில் கீழமை நீதிமன்றங்களிலும் அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க கோரிக்கை வைத்திருந்தார்.

Advertisment

இந்நிலையில், ஏப்ரல் 29- ஆம் தேதி காலை, சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தைக் கூட்டும்படி தலைமைப் பதிவாளருக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவிட்டுள்ளார். அனைத்து நீதிபதிகளும் அவரவர் வீட்டிலிருந்து காணொளி காட்சி மூலம் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்.

http://onelink.to/nknapp

இந்தக் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் ஆகியவற்றின் மே மாத கோடை விடுமுறை குறித்தும், நீதிமன்றங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

Advertisment