'கீழமை நீதிமன்றங்களில் செப்.7 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை' -உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தகவல்!

chennai high court chief judge meeting has been decide district courts

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கீழமை நீதிமன்றங்களில் செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறுகிறது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. வழக்குகள் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள், சாட்சிகள் மட்டும் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படுவர். நீதிமன்ற வழக்கங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உறுதிசெய்ய முதன்மை நீதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றபணிகள் குறித்து செப்டம்பர் 22- ஆம் தேதி மறு ஆய்வு செய்யப்படும். இவ்வாறு உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்கள், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

chennai high court chief judges decide
இதையும் படியுங்கள்
Subscribe