Advertisment

சென்னை உயர்நீதிமன்றம் 7- ஆம் தேதி முதல் செயல்படும்! -நிர்வாகக்குழு கூட்டத்தின் அறிவிப்பால் வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி!

chennai high court again regular working sep 7th

சென்னை உயர்நீதிமன்றம் வருகிற செப்டம்பர்7- ஆம் தேதி முதல் செயல்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகக்குழு கூட்டம் அறிவித்துள்ளது. கடந்த 5 மாதங்களாக சென்னை உயர்நீதிமன்றம் திறக்கப்படாமல் இருந்தது. நீதிமன்றத்தை திறக்கக்கோரி, பல்வேறு சங்கத் தலைவர்கள் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்கள். இந்தக் கோரிக்கையை எல்லாம் பரிசீலிக்க ஏழு நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது இந்தக் குழு கூடி செப்டம்பர்7- ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடத்தலாம் என்று முடிவு செய்து அறிவித்துள்ளது.

Advertisment

தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் உட்பட 6 டிவிஷன் பெஞ்சுகளும், உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர்7- ஆம் தேதி முதல் செயல்படலாம். இதில் வழக்கறிஞர்கள் நேரடியாக வாதாட அனுமதி வழங்கப்படுகிறது. அதன்பிறகு, படிப்படியாக இதில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று இந்தக் குழு அறிவித்துள்ளது. இது வழக்கறிஞர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

Advertisment

Chennai High Court order decision
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe