chennai heavy rains regional meteorological centre

Advertisment

வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகாரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்யும் கனமழையால்வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். மேலும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

குறிப்பாக, கிண்டி, வடபழனி, கோயம்பேடு, விமான நிலையம், பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர், புழல், ஆவடி, பட்டாபிராம், மாம்பலம், சைதாப்பேட்டை, அடையாறு, மெரினா, பெசன்ட் நகர், மயிலாப்பூர், அண்ணா நகர், கேளம்பாக்கம், அண்ணா சாலை, எண்ணூர், போரூர் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனிடையே, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (05/01/2021) காலை 10.00 மணி வரை மழை தொடரும். அதேபோல் மயிலாடுதுறை, நாகை, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், வேலூர், ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மழை தொடரும்" என தெரிவித்துள்ளது.