Advertisment

சென்னையில் கனமழை - இருளில் மூழ்கிய வானம்!

chennai heavy rains peoples are happy

தமிழகத்தில் சேலம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் அரூர், செல்லம்பட்டி, எட்டிப்பட்டி, காட்டூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Advertisment

சென்னையில் கிரீன்வேஸ் சாலை, அண்ணா சாலை, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், நந்தனம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

Advertisment

சென்னையின் பல்வேறு இடங்களில் வானம் இருள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால், வாகனங்களில் வேலைக்கு செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர். வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் மழை பெய்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Regional Meteorological Centre chennai rains Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe