Advertisment

நுங்கம்பாக்கத்தில் 6.4 செ.மீ. மழை பதிவு!

chennai heavy rains meteorological centre

சென்னையில் போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், மதுரவாயல், பூவிருந்தவல்லி, ஆவடி, கோயம்பேடு, வடபழனி, அம்பத்தூர், பாடி, கொரட்டூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர், ஆதம்பாக்கம், ஆலந்தூர், நங்கநல்லூர், மடிப்பாக்கம், எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் இன்று (17/07/2021) மாலை கனமழை பெய்தது.

Advertisment

சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் கடந்த ஒரு மணி நேரத்தில் 6.4 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வில்லிவாக்கம்- 5.6 செ.மீ, புழல்- 4.8 செ.மீ., நந்தனம்- 2.4 செ.மீ, மேற்கு தாம்பரம்- 2.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளது.

Advertisment

கனமழை காரணமாக, சென்னை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியில் 20 அடியை எட்டியது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 520 கனஅடி நீர்வரத்து உள்ள நிலையில் 2,620 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

heavy rains Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe