Advertisment

புழல், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு!

chennai heavy rains lakes water level raised

Advertisment

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் நேற்றிரவு முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சென்னையில் பெரும்பாலான இடங்களில், சாலைகளில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் தேங்கிய நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையின் குடிநீருக்கு ஆதாரமான புழல், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, புழல் ஏரியில் நீர்வரத்து வினாடிக்கு 160 கனஅடியிலிருந்து 971 கனஅடியாக உயர்ந்துள்ளது. புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3,300 மி.கனஅடியில் தற்போது 2,094 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

அதேபோல் சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 116 கனஅடியாக உள்ளது. இந்த ஏரியில் மொத்த கொள்ளளவான 1,081 மி.கனஅடியில் 128 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

water level lakes heavy rain Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe