Advertisment

சென்னையில் மழை பாதிப்பு பற்றி புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு!

CHENNAI HEAVY RAINS HELP LINE NUMBER ANNOUNCED GREATER CHENNAI CORPORATION

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மழை பாதிப்புகளை மூன்றாவது நாளாக ஆய்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

Advertisment

இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை, வெள்ளம் சார்ந்த பாதிப்பு புகார்களை உதவி எண்கள் மூலம் பொதுமக்கள் தெரியப்படுத்தலாம். 044-25619206, 044-25619207, 044-25619208 என்ற தொலைப்பேசி எண்களில் புகார் அளிக்கலாம். மேலும், 044-25619204, 044-25303870 மற்றும் 94454-77205 ஆகிய எண்களிலும் புகார் தெரிவிக்கலாம். 94450-25819, 94450-25820, 94450- 25821 ஆகிய வாட்ஸ் அப் எண்களிலும் புகார் அளிக்கலாம்.1913 என்ற இலவச தொலைப்பேசி எண்ணிலும் மழை, வெள்ளம் சார்ந்த புகார்களைத்தெரிவிக்கலாம்." இவ்வாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Advertisment

chennai corporation heavy rains help line number
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe