chennai heavy rains floods many areas peoples

Advertisment

சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி, மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

கிண்டி, மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, அண்ணா நகர், ஈக்காட்டுத்தாங்கல், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், எழும்பூர், சென்ட்ரல், அண்ணாசாலை, கோயம்பேடு, வடபழனி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, புழல், மாதவரம், செங்குன்றம், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

விடிய விடிய பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

Advertisment

சென்னையில் அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும். அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்று மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகப் பகுதியில் அதிகாலை வரை 7.2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அதேபோல் நுங்கம்பாக்கத்தில் 5.5 செ.மீ., மீனம்பாக்கத்தில் 4 செ.மீ., செங்குன்றத்தில் 13 செ.மீ., சோழவரம் 5.5 செ.மீ., பூண்டி 4.9 செ.மீ., கும்மிடிப்பூண்டியில் 4.6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 8.7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.