Advertisment

ஒருபுறம் கனமழை; மறுபுறம் போக்குவரத்து நெரிசல்; சிக்கித் தவிக்கும் பயணிகள்

Heavy rain on the one hand; Traffic jam on the other side; stranded commuters

சென்னையில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, சேலம், நாமக்கல், விருதுநகர், ராமநாதபுரம், குமரி, நெல்லை, தென்காசி, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தநிலையில் சோழிங்கநல்லூர் பகுதியில் கனமழையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பணி முடிந்து வீடு திரும்பும் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். துரைப்பாக்கம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் போக்குவரத்து போலீசார் ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்புகளை வெளியிட்டு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Chennai weather
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe