தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருவாரூர், அரியலூர், கடலூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, சிதம்பரம் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த இரு தினங்களாக கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/h22.jpg)
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. சென்னையில் மாம்பலம், சைதாப்பேட்டை, வடபழனி, வாவின், கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, கிண்டி, தியாகராய நகர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டு, திருவாலங்காட்டில் தலா 8 செ.மீ, திருத்தணியில் 7 செ.மீ, பூந்தமல்லி 9.6 செ.மீ, செம்பரம்பாக்கத்தில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரே நாளில் 100 மில்லியன் கனஅடி நீர் உயர்வு. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு 649 மில்லியன் கனஅடியிலிருந்து 749 கனஅடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் ஏரிக்கு 1,182 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/h3_4.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வீராணம் ஏரியில் இருந்து பாதுகாப்பு காரணமாக 5,300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 28,500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
சென்னையில் மழை பாதிப்பு குறித்து 044- 25384520, 044- 25384530 மற்றும் 044- 25384540 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்று சென்னை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் 94454- 77205 என்ற வாட்ஸ் ஆப் என்ற எண்ணிலும் மழை பாதிப்பு குறித்து தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)