காமராஜரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Advertisment

இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், செல்லூர் ராஜு, அன்பழகன், விஜயபாஸ்கர், மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.