ஊரடங்கு முடிந்து மே 4-ம் தேதி முதல் சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வெளியிட்டது மாநகர போக்குவரத்து கழகம்.

Advertisment

chennai government  bus facilities transport employees

அதன் படி, அனைத்து பணியாளர்களும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வர வேண்டும். மணிக்கு ஒரு முறை ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தங்களது கைகளைச் சோப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். அவரவர் பயன்படுத்தும் பொருட்களை அவர்களே பணி நேரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். பணி முடிந்து போகும்போது போக்குவரத்து பணியாளர்கள் பயன்படுத்திய பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும். காய்ச்சல் மற்றும் கரோனா சம்மந்தமான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் முறைப்படி விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.

chennai government  bus facilities transport employees

Advertisment

அவரவர் பணியிடங்களில் (Social Distance) சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து பணியாளர்களும் தங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் 'ஆரோக்கிய சேது' என்ற செயலியை டவுன்லோடு செய்திட வேண்டும். அதன்படி கரோனா தொற்று அருகில் கண்டறியப்பட்டால், உடனே 104 தொலைப்பேசிக்கு அது பற்றி தகவல் கொடுக்க வேண்டும். பணியாளர்கள் பணியின் போது 50 மி.லி கிருமி நாசினி (Sanitizer) வைத்திருக்க வேண்டும்.

http://onelink.to/nknapp

பேருந்தில் ஏறும் பயணிகள் முகக்கவசம் இல்லாமல் இருந்தால் பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் சமூக இடைவெளியினைப் பின்பற்றி பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் சென்னையில் மே 4-ம் தேதி முதல் அரசு பேருந்துகள் சேவை மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது.