Advertisment

சென்னை - புனித வெள்ளி சிறப்பு திருப்பலி நேரடி ஒளிபரப்பு!

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வருகிற 14-ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்து கோவில்கள் கிறிஸ்தவ தேவாலயங்கள் பள்ளிவாசல்களிலும் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்படாததால் அங்கு நடைபெறும் பூஜைகள் சிறப்பு பிரார்த்தனைகள் தொழுகைகள் கூட்டம் இன்றி நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலத்தின் கடைசி நாளான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளியான 10.04.2020 அன்று சென்னை லஸ் சர்ச்சில் சிறப்பு திருப்பலி தொலைக்காட்சியின் மூலம் நேரடி ஒளிபரப்பின் வழியாக நடத்தப்பட்டது.

Advertisment

கிறிஸ்தவர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடியே இன்று புனித வெள்ளி தினத்தில் உபவாசமிருந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கிறிஸ்தவ தேவாலயங்களில் போதகர்கள் நடத்திய சிறப்பு பிரார்த்தனைகள் பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Chennai church
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe