சென்னை முழு ஊரடங்கு - வெறிச்சோடிய ராஜீவ்காந்தி சாலை (படங்கள்) 

கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு கடந்த மாதத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது.

அதேபோல் ஞாயிற்றுக்கிழமையான இன்று எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு சென்னையில் கடைப்பிடிக்கப்பட்டது. போலீசார் பல்வேறு இடங்களில் குழுக்களாக உள்ளனர். இந்த ஊரடங்கில் இருசக்கர வாகனம், கார்களில் காரணமில்லாமல் வெளியே வர வேண்டாம் என முன்னதாகவே கேட்டுக்கொண்டதால் சென்னையில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மேலே படங்களில் உள்ள இடம் ராஜீவ்காந்தி சாலை.

Chennai corona lockdown
இதையும் படியுங்கள்
Subscribe