சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் பிரபல உணவகமான முருகன் இட்லி கடையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.
முருகன் இட்லி கடையில் உணவு வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் உணவில் புழுக்கள் இருந்ததாக கூறி 'வாட்ஸ் ஆப்' மூலம் வீடியோ ஒன்றரை பரப்பியுள்ளார். இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அம்பத்தூர் முருகன் இட்லி கடைக்கு கடந்த 7- ஆம் தேதி சென்று ஆய்வு செய்தனர். இந்நிலையில் உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் மற்றும் ஒழுங்குமுறையின் படி முருகன் இட்லி கடையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.